திங்கள், 13 ஜூன், 2011

அறிமுகம்

 நண்பர்களே, நான் இந்த வலைப்பதிவை நீண்டகால சிந்தனைக்குப் பின் துவங்கியிருக்கிறேன். எனது நோக்கம் நான் படித்த சுவைத்த, அனுபவித்த நூல்ககளை அறிமுகம் செய்வதும் அறியாத நூல்களை அறிந்துகொள்வதுமாகும். ஆனால் இதில் புத்தக விமரிசனம் எழுதும் நோக்கம் இல்லை.... நாம் புத்தகம் படிப்பது விமரிசனம் செய்வதர்காக அல்ல என்பது என் கருத்து.... நான் ஒரு வாசகன். அவ்வளவுதான். ஆகவே வாசித்த நூல்களையும் அதனால் ஏற்பட்ட மன பாதிப்புகளையும் பதிவு செய்வதே நோக்கம்...
 
எல்லா நூல்களும் நம்மிடம் ஏதாவது சலனத்தை ஏற்படுத்திவிட்டுத்தான் போகின்றன. அது நல்ல புத்தகமா இல்லையா என்பதெல்லாம் வேறு பிரச்சனைகள்.  நான் எட்டு அல்லது ஒன்பது வயதில் வாசித்த அம்புலிமாமா கதைகளும், how to make toys என்னும் பத்து பக்க புத்தகமும் எனக்குள் எவ்வளவோ கனவுகளை விதைத்துள்ளது..
 
இலக்கிய தாகம் என்பது தீராது. எதையாவது தேடி வாசிக்க தூண்டிக்கொண்டே இருக்கும். வாசிக்க வாசிக்க மனதின் அகலம் கூடிக்கொண்டே போகிறது.